அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடல் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

செப்டெம்பர் 26, 2024 - 10:05
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடல் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த அலுவலகத்தை அடுத்துள்ள காலி நுழைவாயிலுக்கு அருகில் நேற்று முன்தினம் (24) முதல் அந்த வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக அந்த இடத்திற்கு நேற்று விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட வாகனங்களை பார்க்க பொதுமக்களும் வந்திருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!