ரயில் சேவை மறுசீரமைப்புக்கு நிபுணர் குழு நியமிக்க பரிந்துரை
குறித்த குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை ரயில் சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
குறித்த குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.
முன்னதாக, மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் ரயில் பணிப்புறக்கணிப்புகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அமைச்சரவை கடுமையான தீர்மானம் எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், இது தொடர்பில் அமைச்சரவையில் கூற முயற்சிப்பேன் என்றும் கூறியிருந்தார்.