உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அடுத்த மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதனையடுத்து, பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.