அஸ்வினை நீக்கியதற்கு ரோகித் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் அகார்கர்..

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா அஸ்வினை எடுக்கவில்லை.

ஜுலை 8, 2023 - 11:43
அஸ்வினை நீக்கியதற்கு ரோகித் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் அகார்கர்..

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா அஸ்வினை எடுக்கவில்லை.

அதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இந்த நிலையில் தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் பொறுப்பேற்று இருக்கும் நிலையில் ஆகாஷ் சோப்ரா சில பல கருத்துக்களை அவரிடம் வலியுறுத்தி இருக்கிறார். 

இது ரோகித் சர்மாவுக்கு பெரிய ஆப்பாக கூட அமையலாம். இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில், நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை வைத்து தான் நம்மை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் எப்படி பயிற்சி வழங்கினீர்கள் என்பது போட்டியின் முடிவை வைத்து அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். அதை போல் தான் தேர்வுக்குழுவினரும் நீங்கள் தேர்வு செய்த அணி எவ்வாறு செயல்படுகிறது. 

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகார்கர்.. இனியாவது  தலை எழுத்து மாறுமா?

நீங்கள் அணியை எவ்வாறு மாற்றுகிறீர்கள். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதை வைத்து தான் உங்களுடைய செயல்பாடுகளை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

தேர்வு குழு தலைவராக இருக்கும் நபர் கேப்டன் செய்யும் தவறு குறித்து கேள்வி கேட்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது குறித்தும் அஜித் அகார்கர் கேள்வி கேட்க வேண்டும். 

அஸ்வினை நீக்கியதற்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்றும் தேர்வு குழுவினர் கேட்கலாம். தேர்வுக்குழு தலைவர் பிளேயிங் லெவனை நிச்சயம் தேர்வு செய்ய முடியாது.

ஆனால் நீங்கள் ஏன் இதை செய்யவில்லை என்று ஒரு தேர்வுக்குழு தலைவராக உங்களுக்கு கேட்க உரிமை இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மும்பை அணியின் தேர்வு குழுத் தலைவராக அஜித் அகார்கர் இருந்தபோது கடும் நடவடிக்கைகளை எடுத்து பிரபலமானார். 

இதனால் ஆகாஷ் சோப்ரா யோசனைப்படி அஜித் அகார்கர் நடவடிக்கை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!