கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம்!
கோழி இறைச்சியின் விலையை குறைக்க உள்நாட்டு கோழிப்பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலையை குறைக்க உள்நாட்டு கோழிப்பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாயால் குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதான கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 25 ரூபாயாக குறைக்குமாறும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளத்திற்கான இறக்குமதி வரியை 25 ரூபாயாக குறைக்கும் யோசனையை ஜனாதிபதியிடம் இன்று முன்வைக்க அமைசர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.