கடைசி ஓவர் வரை பேராட்டம்.. இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் அணி!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. 

பெப்ரவரி 27, 2025 - 11:56
பெப்ரவரி 27, 2025 - 11:59
கடைசி ஓவர் வரை பேராட்டம்.. இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் அணி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் கடைசி ஓவர் வரை விளையாடி 177 ரன்கள் குவித்தார். 146 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் 12 பவுண்டரியுடன் 177 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடியது.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் 12 ரன், பென் டக்கட் 38 ரன், ஜெமி ஸ்மித் 9 ரன், ஹேரி ப்ரூக் 25 ரன், கேப்டன் ஜாஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார்.

ஜோ ரூட் 112 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஓவர்டன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!