வாகனங்களை பதிவு செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வருமான வரி இலக்கம் இல்லாத நபர்களால் கார்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வரி இலக்கம் இன்றி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.