வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிப்பு
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இதமல்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாரால் சனிக்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று(11) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நான்கு பிடியாணைகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு பிடியாணைகளும், தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.