கண்ணீர் விட்டு கதறியழுத மும்தாஜ்
தளபதி விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மும்தாஜ் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் இவர் ஆடிய நடனம் அனைத்து இளைஞர்களையும் கட்டிப்போட்டது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மும்தாஜ் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் இவர் ஆடிய நடனம் அனைத்து இளைஞர்களையும் கட்டிப்போட்டது.
பல படங்களில் நடித்திருந்த மும்தாஜ், பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதைதொடர்ந்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் போட்ட சண்டைகள் ஒவ்வொன்றும் வைரல் ஆனது.
இந்நிலையில் இஸ்லாமிய புனித தலமான மக்காவிற்கு சென்றுள்ளதை வீடியோவாக பதிவிட்டுள்ளார் மும்தாஜ்.
அந்த வீடியோவில் அவர், " இந்த பூமியில் பிடித்த இடமான மக்காவிற்கு வந்தது நான் என் வாழ் நாள் பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
நான் அனைத்து மக்களுக்காகவும் பிராத்தனை செய்கிறேன். மேலும், நாங்கள் செய்யும் குற்றங்களை மன்னியுங்கள், எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை தாருங்கள். எங்கள் பாவங்களை மன்னியும்" என கண்ணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார்.