நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி
வேட்டையாடு விளையாடு பட நடித்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்
வேட்டையாடு விளையாடு பட நடித்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.