செயற்பாட்டாளர் தானிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஒக்டோபர் 28, 2023 - 16:08
செயற்பாட்டாளர் தானிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதான, செயற்பாட்டாளர் தானிஸ் அலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்குள் பிரவேசித்த அவர், அங்கிருந்த அதிகாரிகளுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
 
அதன்பின்னர், ரயில் நிலையத்தில் ஊழியர்கள் கடமையில் இருந்திருக்கவில்லை எனக்கூறி தமது அலைபேசியில் காணொளி பதிவு செய்துள்ளார். 
 
இதனையடுத்து, தானிஸ் அலி ரயில் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!