விளையாட்டு மைதானத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை
கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்திற்கு சனிக்கிழமை (15) விஜயம் செய்த தௌபீக் எம்.பி, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்தை மீண்டும் முழுமையாக பயன்படுத்துவதற்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிஹார் மற்றும் அரை ஏக்கர் விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளின் பேரில், கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்திற்கு சனிக்கிழமை (15) விஜயம் செய்த தௌபீக் எம்.பி, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது கடந்த 4 வருடங்களாக கிண்ணியா அரை ஏக்கர் மைதானம் திருத்தவேலைகள் முடிவடையாத நிலையினால், அம்மைதானத்தை முழுமையாக விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதை கருத்திற்கொண்டு, அதனை மீண்டும் முழுமையாக பயன்படுத்துவதற்குறிய நடவடிக்கையை இரு வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் எம்.பி தெரித்தார்.
இந்த விஜயத்தில் மேலதிக அரசாங்க அதிபர், பொறியியலாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
(எஸ். சினீஸ் கான்)