ஊழலை தவிர்க்க அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.

இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு என்று கூறினார்.
அத்துடன், தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று வரவு - செலுவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.