அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபாய்.

டிசம்பர் 8, 2024 - 01:31
டிசம்பர் 20, 2024 - 02:02
அரிசி விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் மொத்த விற்பனை விலை 225 ரூபாயாகவும், சில்லறை விலை 230 ரூபாயாகவும் பேணுமாரு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், அதனை செய்யத்தவறும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வர்த்தகர்களுடன் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை கூறியுள்ளார்.

வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அரிசிக்கான மக்களின் உரிமையில் கை வைக்க வேண்டாம் என அரிசி ஆலை உரிமையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,  ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகும். சில்லறை விலை 230 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபாய்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் சம்பாவின் மொத்த விலை 235 ரூபாய், சில்லறை விலை 240 ரூபாய்.

ஒரு கிலோகிராம் கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபாய். சில்லறை விலை 260 ரூபாய்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!