துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது
கடற்தொழில் ஈடுபட்டு வரும் வாகரையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு துப்பாக்கி ரவையுடன் சென்ற இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டு, அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரின் உடமையிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.
கடற்தொழில் ஈடுபட்டு வரும் வாகரையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.