ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு - அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிலிமத்தலாவ மற்றும் பெனிதெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற ஷார்ட்ஸ் மற்றும் சாம்பல் நிற சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.