அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்
அவுஸ்திரேலியாவின் Hobart, Tranmere Point பகுதியில் உள்ள கரையோரத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் Hobart, Tranmere Point பகுதியில் உள்ள கரையோரத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 25 வயதுடைய இலங்கையர் என நம்பப்படும் அந்த நபர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வைத்திய பரிசோதனைகள் நடத்தப்படுவதுடன், மேலும் நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.