நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா வந்த மாணவர் குழுவொன்று, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட்டதன் பின்னர் தொரபிட்டிய ஆற்றில் நீராடச் சென்ற வேளையில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது..
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.