தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க தனது கல்லூரியை வெற்றி பெற செய்த ரக்பி வீரர்!
போட்டி முடிவடைந்த உடனே, இசிபத்தன ரக்பி அணியுடன், புனித சூசையப்பர் கல்லூரி வீரர்களும் ஹேஷானின் தாயாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விளையாட்டின் உன்னதத் தன்மையை வெளிக்காட்டியமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தனது தாயை இழந்த சோகத்தை தாங்கிங்கொண்டு விளையாடிய இசிபத்தன கல்லூரி ரக்பி அணியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால், தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இசிபத்தன அணி வெற்றி பெற்றிருப்பினும், இந்தச் சம்பவம் ரந்திமாலைப் போலவே அனைவரின் மனங்களையும் இறுக்கமாக்கியது.
தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடரில் கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி கொழும்பு சீ.ஆர். அண்ட் எப்.சீ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற ஹேஷான், இசிபத்தன அணிக்காக முதல் ட்ரையை பெற்றுக் கொடுத்து, அணியை முன்னிலைப்படுத்தினார்.
போட்டியின் முழு நேர முடிவில் இசிபத்தன அணி, 28க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் புனித சூசையப்பர் அணியை வென்றதுடன், போட்டித் தொடரில் முன்னிலை வகித்தது.
போட்டி முடிவடைந்த உடனே, இசிபத்தன ரக்பி அணியுடன், புனித சூசையப்பர் கல்லூரி வீரர்களும் ஹேஷானின் தாயாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விளையாட்டின் உன்னதத் தன்மையை வெளிக்காட்டியமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஹேஷானின் தாயார் வெள்ளியன்று (ஜூன் 30) காலமானதுடன், அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன.