நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் அதிகளவான ஊழியர்கள் அரசியல் நியமனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.
பல துறைகளில் பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், சில துறைகளில் பணியாளர்கள் மேலதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய நிலைமையின் அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.