சாதாரண மற்றும் உயர்தரங்களில் மாற்றம் - வெளியான தகவல்
க.பொ.த பரீட்சையை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

க.பொ.த பரீட்சையை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் நீதி அமைச்சர் திரு.விஜேதாச ராஜபக்ஷ நேற்று (21) பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பான அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை முன்வைக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.
மேலும் பேசிய அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு பதிலாக சுயாதீன உயர்கல்வி ஆணைக்குழுவை அமைக்க உயர்கல்வி அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.