டெங்கு காய்ச்சல் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
ஜனவரி மாதம் வரை காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் தற்போது 24 ஆக குறைந்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் துரித கதியில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி மாதம் வரை காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் தற்போது 24 ஆக குறைந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனால், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிக எண்ணிக்கையாகும்.
அதன்படி, இந்த வருடத்தில் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில், கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அந்த எண்ணிக்கை 3,359 ஆகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,245 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,324 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 1,052 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.