உள்ளூராட்சி ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

மார்ச் 11, 2024 - 00:39
உள்ளூராட்சி ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!