துப்பாக்கிச் சூட்டில் கடையின் உரிமையாளர் ஒருவர் பலி
கொஹுவல, சாரங்கரா வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கொஹுவல, சாரங்கரா வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதன்படி நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
43 வயதுடைய கடையின் உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்களோ இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.