மது விருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை
மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் எஹட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மது விருந்து நடந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் முன் இருந்த குறித்த நபரை கட்டுத்துவக்கால் சுட்டுள்ளார்.