வாகன சோதனை தொடர்பில் பொலிஸாருக்கு பறந்த புதிய உத்தரவு
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) புதிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்..

சிவில் உடையில் கடமையாற்றும் போது சோதனை செய்வதற்காக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்த.
இதனை, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) புதிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்..
கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, இந்த புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பிரயோகத்தில்
உயிரிழந்த சாரதிக்கு இழப்பீடு
இதேவேளை, உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தத் தொகையை வழங்கி உள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் நாரம்மல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸாரின் துப்பாக்கிப் வெடித்தில் சாரதி உயிழந்தார்.
மஹரச்சியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.