யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

ஜுன் 30, 2023 - 16:47
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

புத்தளம் - மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீயை, மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாவி  முகாமைச் சேர்ந்த விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், இந்த தீ விபத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!