பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ரணில் விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

செப்டெம்பர் 24, 2024 - 16:05
செப்டெம்பர் 24, 2024 - 16:06
பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ரணில் விசேட அறிவிப்பு

அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என,  முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார.

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக அவர் தொடர்ந்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பாரிய கூட்டணியை உருவாக்க இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!