தலையில் தேங்காய் விழுந்து பெண் உயிரிழப்பு
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த 49 வயதான திருமணமான பெண் ஒருவர், தலையில் தேங்காய் விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நில்மினி சுனேத்ரா குணதிலகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



