இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

நவம்பர் 16, 2025 - 07:47
நவம்பர் 16, 2025 - 07:51
இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

சர்ச்சைகளில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டு, அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

ஆண்ட்ரூவின் பல பட்டங்கள் பறிக்கப்பட்டதோடு, அவர் வசிக்கும் ராயல் லாட்ஜ் மாளிகையை விட்டு வெளியேற மன்னர் சார்லஸ் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. விவாகரத்துக்குப் பிறகும், சாரா இதே மாளிகையில் ஆண்ட்ரூவுடன் வசித்து வந்தார். ஆனால் ஆண்ட்ரூக்கு வெளியேற உத்தரவிடப்பட்டதால், சாராவுக்கும் அங்கு தொடர்ந்துவாழ வாய்ப்பு இல்லை.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

சாரா தற்போது வாழும் இடத்தை இழந்துள்ளார், தொண்டு நிறுவனங்களின் ஆதரவும் குறைந்துள்ளது, எப்ஸ்டீன் தொடர்பான அமெரிக்க விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால், FBI விசாரணைக்கு உட்படலாம் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

ராஜகுடும்ப நிபுணர் ஒருவரின் கூற்றுப்படி, சாராவின் பிரித்தானிய வாழ்க்கை இப்போது முடிவுக்கு வருவதாக தெரிகிறது. அவரை அநாதரவாக நிற்க விட்டுவிடாமல், மகளான இளவரசி யூஜீனி, தனது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்கின் போர்ச்சுக்கல் வீட்டில் தங்க இடம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால், சாரா விரைவில் பிரித்தானியாவை விட்டு வெளியேறவிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிபுணர்கள் கருத்துப்படி, ராயல் குடும்பத்திற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களுக்கு இது இயல்பான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!