வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!
வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.
மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை, சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மைய நாட்களில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், கிராமத்தை சுற்றி யானை வேலியை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.