வெள்ளை மாளிகையில் டிரம்ப்–புடின் புகைப்படம்: கவனம் ஈர்த்த அரசியல் தருணம்

வெள்ளை மாளிகையின் White House மேற்கு விங்கையும் அதிபர் இல்லத்தையும் இணைக்கும் ‘பாம் ரூம்’ என்ற அதிகாரப்பூர்வ விருந்தினர் காத்திருப்பு பகுதியில் இந்த படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி 28, 2026 - 15:23
ஜனவரி 28, 2026 - 15:26
வெள்ளை மாளிகையில் டிரம்ப்–புடின் புகைப்படம்: கவனம் ஈர்த்த அரசியல் தருணம்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் ரஷ்ய அதிபர் Vladimir Putin இணைந்து நடந்து செல்லும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக PBS செய்தியாளர் எலிசபெத் லாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் கடந்த ஆண்டு அலாஸ்காவின் அங்கோரேஜில் நடைபெற்ற இருநாட்டு உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையின் White House மேற்கு விங்கையும் அதிபர் இல்லத்தையும் இணைக்கும் ‘பாம் ரூம்’ என்ற அதிகாரப்பூர்வ விருந்தினர் காத்திருப்பு பகுதியில் இந்த படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே அறையில், டிரம்ப் தனது பேரக்குழந்தையுடன் எடுத்த குடும்பப் புகைப்படத்தின் மேல் இந்த டிரம்ப்–புடின் படம் தொங்கவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம், கடந்த ஆகஸ்ட் மாத செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் காட்டிய அதே படத்துடன் ஒத்திருக்கிறது. அந்த படம் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியதாக டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார். பாம் ரூம் பொதுமக்கள் சுற்றுலாவிற்கு திறக்கப்படாத இடமாக இருந்தாலும், வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் பயன்படுத்தும் முக்கிய இடமாக உள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த அறை மறுசீரமைக்கப்பட்டு, முறையான வரவேற்பு பகுதியாக மாற்றப்பட்டது.

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ஜனாதிபதி சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களை காட்சிப்படுத்துவது வழக்கமான நடைமுறையே என்றும், அவை காலகாலமாக மாற்றப்படுவதாகவும் கூறினார். இருப்பினும், டிரம்ப்–புடின் உறவின் சிக்கலான அரசியல் பின்னணி காரணமாக, இந்த புகைப்படம் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பதவிக்கு மீண்டும் வந்ததிலிருந்து, டிரம்ப் உக்ரைன் போரில் அமைதி முயற்சிகள் முன்னேறாததை காரணமாக்கி புடினை சில நேரங்களில் விமர்சித்தும், அதே சமயம் இருவருக்கிடையேயான தனிப்பட்ட நல்லுறவைப் புகழ்ந்தும் பேசியுள்ளார். 2025 ஆகஸ்டில் அலாஸ்காவில் நடைபெற்ற இருநாட்டு உச்சி மாநாடு, 2022க்கு பிறகு அமெரிக்கா–ரஷ்யா தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்த முதல் சந்திப்பாக இருந்தது. அந்த மாநாடு உடனடி தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தமின்றியே முடிந்தாலும், இரு தரப்பும் அதனை பயனுள்ளதாக வர்ணித்தன.

புடினும் டிரம்புடன் உள்ள தொடர்புகளை நேர்மறையாகவே சித்தரித்து வருகிறார். டிரம்ப் பதவியில் தொடர்ந்திருந்தால் உக்ரைன் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற அவரது கருத்தையும் புடின் ஒத்துக் கூறியுள்ளார். போர் முடிந்த பின் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியான நேரத்தில், உக்ரைன் தொடர்பான தூதரக பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. கடந்த வாரம், 2022க்கு பிறகு முதன்முறையாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் அபுதாபியில் முக்கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதி திட்டத்தை முன்னெடுக்க நடந்த இந்த சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்பட்டாலும், நிலப்பரப்பு தொடர்பான விவகாரங்கள் இன்னும் முக்கிய தடையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!