12 மாதங்களுக்குப் பிறகு கும்பம் செல்லும் புதன்: தொழிலில் கொடிக்கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன் பகவான். புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணக்கீடு போன்றவற்றின் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன் பகவான். புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணக்கீடு போன்றவற்றின் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது, குறுகிய கால இடைவெளியில் தனது ராசி நிலையை மாற்றக்கூடிய கிரகமாகவும் புதன் விளங்குகிறார். இதனால் புதன் பெயர்ச்சியின்போது அதன் தாக்கம் தொழில், படிப்பு மற்றும் தொடர்பு திறன்களில் தெளிவாகக் காணப்படும். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் புதன் விளங்குகிறார்.
இந்த நிலையில், புதன் வரும் பிப்ரவரி 03 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் என்பதால், இந்த பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, புதன் 12 மாதங்களுக்குப் பிறகு கும்ப ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சனி பகவான் ஆளும் ராசிக்கு புதன் செல்லும் இந்த காலகட்டம், சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை அளிக்கும் என கூறப்படுகிறது. வேலையில் முன்னேற்றம், வருமான உயர்வு மற்றும் தொழிலில் வளர்ச்சி போன்ற பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், கும்ப ராசிக்கு செல்லும் புதனால் குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் 11ஆம் வீட்டில் பயணிப்பதால், நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதால் வீட்டுச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை உயரும். பேச்சுத் திறன் மூலம் பல விஷயங்களைச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் 4ஆம் வீட்டில் பயணிப்பதால், வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம். வேலை அல்லது தொழிலில் செய்த கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். மன உறுதி அதிகரித்து, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். தம்பதிகளுக்கிடையே புரிதலும் இணக்கமும் வலுப்படும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், நிதி நிலைமை மேலும் வலுவடையும்.
மகர ராசிக்காரர்களுக்கு புதன் 2ஆம் வீட்டில் பயணிப்பது நிதி மற்றும் தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக அமையும். திடீர் பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை உறுதியடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூடுதல் வருமான ஆதாரங்களும் உருவாகலாம். பேச்சுத் திறன் மூலம் பல காரியங்களைச் சுலபமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வார்த்தைகள் பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட கணிப்புகள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுவது நல்லது.