ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு: மூவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்
பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீஸாரால் மூடப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்கவும் geo-targeted குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Lake Cargelligo என்ற சிறிய நகரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வந்த தகவலின் பேரில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அங்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் சடலமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த ஆண் ஒருவரின் நிலை தீவிரமாக இருந்தாலும், தற்போது நிலையானதாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போலீஸாரால் மூடப்பட்டு, அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்கவும் geo-targeted குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது. சுமார் 1,500 பேர் வசிக்கும் இந்த நகரில் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் நிறைந்திருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு, ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க நாள் அனுசரிக்கப்பட்ட நாளிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நாளில், கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று Sydney நகரில் ஹனுக்கா விழாவின் போது 15 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் நினைவுகூரப்பட்டது. அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் சிந்தனையால் பாதிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அது 1996க்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்.