இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது.

Apr 11, 2024 - 07:28
Apr 11, 2024 - 07:28
இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது.

ஏப்ரல் முதல் ஒன்பது நாட்களுக்கு, மொத்தம் 50,537 பேர் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரையிலான காலக்கட்டத்தில் 686,321 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ஒன்பது நாட்களில் சர்வதேச  சுற்றுலாப் பயணிகளின் வருகை 45 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

இலங்கை ஏப்ரல் மாதத்தில் 168,539 மற்றும் 182,724 சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது, இந்த இலக்கை அடைய தினசரி சராசரி 5617 மற்றும் 6090 க்கு இடையில்  சுற்றுலாப் பயணிகளின் வருகை தேவைப்படுகிறது.

இதயும் படிங்க: வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை

இந்தியாவில் இருந்து அதிகளவான  சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், இது மாதத்தில் மொத்த வருகையில் 19 சதவீதமாக உள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. (News21.lk)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.