41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; அறிவிப்பு வெளியானது 

எதிர்வரும்  21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள், பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 8, 2025 - 15:24
41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; அறிவிப்பு வெளியானது 

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாக நான்கு நாட்களுக்கு பயன்படுத்தப்படும்  பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் என,  கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும்  21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள், பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கும் நான்கு நாள் விடுமுறை வழங்கப்படுவதுடன்,  நிகழ்வின் போது வீதி  போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை வழங்கப்படும் பாடசாலை நாட்களை ஈடுசெய்ய, ஏப்ரல் 28ஆம் திகதி முதல் ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாளைக்கு மேலதிகமாக ஒரு மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!