முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்... சச்சின், தோனி வரிசையில் இணைந்தார்!

இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளதுடன்,  830 புள்ளிகள் பெற்று ல் முதலிடம் பிடித்துள்ளார். 

நவம்பர் 8, 2023 - 21:42
முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்... சச்சின், தோனி வரிசையில் இணைந்தார்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட அனைவருமே பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட 5 வீரர்களும் அபாரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி வீரர்களின் திறமை ஐசிசி ஒருநாள் தரவரிசையிலும் பிரதிபலித்துள்ளது. ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளதுடன்,  830 புள்ளிகள் பெற்று ல் முதலிடம் பிடித்துள்ளார். 

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதுவரை சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர். 

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

கோலிக்கு பின் ஷுப்மன் கில் முதலிடம் பிடித்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!