அரச ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் தற்போது உள்ள 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது உள்ள 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், சம்பள உயர்வை அடைவதற்கு அரச சேவையை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், வருவாயை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வீண் செலவுகளை அவதானிப்பதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே நல்ல வருமானத்தை பெற முடியும் என எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.