2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை வீரர்..  என்ன காரணம்?

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

Apr 2, 2024 - 16:32
Apr 2, 2024 - 16:39
2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை வீரர்..  என்ன காரணம்?

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

குசல் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்ன 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சந்திமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்க 57 ரன்னும் எடுத்தனர். பங்களாதேஷ் சார்ப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசித பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. 

இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 

இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான தினேஷ் சந்திமால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 59 ரன்னும், 2வது இன்னிங்சில் 9 ரன்னும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.