2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.
2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சிதான் இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
அறிக்கையின் படி, கைவினைப் பணிகள், இயந்திர இயக்கம், அலுவலக நிர்வாகம் போன்ற துறைகள் அதிக ஆபத்தில் உள்ளன. அதேசமயம், உயர் திறன் மற்றும் தொழில்முறை திறன்கள் தேவைப்படுத்தும் பணிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
பிரித்தானிய பொருளாதாரத்தில் 2035-க்குள் சுமார் 23 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை பெரும்பாலும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை துறைகளில் மட்டுமே உருவாகும் என்பதால், குறைந்த திறன் பணியாளர்கள் வேலை பெறுவது சவாலாக மாறும் என ஆய்வு தெரிவிக்கிறது.
முன்னர் வெளியான கிங்ஸ் கல்லூரி ஆய்வும், 2021–2025 காலகட்டத்தில் உயர்நிலை பணியாளர்கள் வேலை இழப்பில் 9.4% உயர்வு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியது. மேலும், பிரித்தானிய அரசு, மேலாண்மை ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் போன்ற பணிகளும் AI மூலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக பட்டியலிட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலை சந்தையில் சமநிலைக்கு பெரிய சவால்களை உருவாக்கும் நிலை தெளிவாக இருப்பதாக NFER ஆய்வு வலியுறுத்துகிறது.