யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

Jan 14, 2024 - 07:17
யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு காய்ச்சல் காரணமாக உயர்தர மாணவி ஒருவர் அம்பியுலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் -  வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

டெங்கு நோய் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

எனினும் உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலமாக பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...