அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 14, 2024 - 11:40
அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம் காரணமாக செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அரச செலவுக் கட்டுப்பாடு, அத்தியாவசியச் செலவுகள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் அரச செலவினம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம் காரணமாக, மேலதிக நேரம், பயணம் மற்றும் இதர கொடுப்பனவுகள் போன்றவற்றின் போது அத்தியாவசிய செலவுகளை மட்டும் தாங்குதல் போன்ற ஒதுக்கப்பட்ட நிதியில் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சு, மாகாண செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!