ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 12, 2025 - 19:25
ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்தோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.

அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள், தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

2011-19க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!