9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் 9, 2023 - 15:14
டிசம்பர் 9, 2023 - 18:48
9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!