பழங்கால பொக்கிஷங்களுடன் எண்மர் கைது!
அவர்களிடம் இருந்து புதையல்களாக காணப்பட்ட பித்தளை கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பழங்கால பொக்கிஷங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களைத் தம்வசம் வைத்திருந்த 8 சந்தேகநபர்களை, கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து புதையல்களாக காணப்பட்ட பித்தளை கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடவத்தை - சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 சந்தேகநபர்களும் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேலுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் - கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரயும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர், கற்பிட்டி பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.