யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையால் 71 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இசை நிகழ்ச்சியில் வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது”என குறிப்பிட்டுள்ளார்.