டெல்லி வைத்தியசாலையில் பயங்கர தீ விபத்து: 7 குழந்தைகள் பலி
12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையில் நேற்று இரவு 11.32 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை முன்னெடுத்ததுடன், பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, குஜராத்தில் நேற்று விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகிய சோக நிகழ்வு நடைபெற்ற அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.