5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற தகுதி
இந்த நாட்டில் உள்ள சுமார் 5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள சுமார் 5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நம்பிக்கையில் பெருமளவான பணத்தை செலவழித்து தகைமைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.