அழகான மனைவியுடன் வாழும் டாப் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்1
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அழகான மனைவி உடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல் இதோ.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அழகான மனைவி உடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல் இதோ.
கிரிக்கெட் வீரரின் குடும்பம் என்று 90ஸ் கிட்ஸ்களிடம் கூறினால் அவர்கள் கண் முன் நிற்பது சச்சினும் அவருடைய மனைவி அஞ்சலியும் தான்.
தன்னை விட 5 வயது மூத்தவராக இருந்த அஞ்சலியை சச்சின் திருமணம் செய்து கொண்டு தற்போது அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்த ஜோடிக்கு சாரா மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். காதலித்து இரு வீட்டார்களின் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணம் தற்போது வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருப்பவர்கள் தோனி சாக்ஷி ஜோடி.
மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்ஷி, தோனி வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்கு உலகக்கோப்பை கிடைத்தது. தோனியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் சாக்ஷி தற்போது அவரின் பல பிசினஸ்களை பார்த்து வருகிறார்.
இதேபோன்று விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடியும் 2K கிட்ஸ்களின் மனதை கொள்ளை அடித்தவை. அனுஷ்கா ஷர்மா பாலிவுட் நட்சத்திரமாக தன்னுடைய அழகையும் திறமையும் வைத்து ஜொலித்தவர்.
இவரை விராட் கோலி காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவிக்காக குடும்பத்தையே விட்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார் கோலி. தன்னுடைய ஒவ்வொரு மாற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் அனுஷ்கா சர்மாவின் பங்கு இருப்பதாக விராட் கோலி பலமுறை கூறியிருக்கிறார்.
இதேபோன்று சுரேஷ் ரெய்னா பிரியங்கா ஜோடியை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இருவரும் பொருத்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
பிரியங்கா சாதாரண மனைவியாக இல்லாமல் ரெய்னாவை ஒரு தொழில் முனைவராகவும் மாற்றி இருக்கிறார். ரெய்னா தற்போது ஹோட்டல் பிசினஸ், குழந்தைகளுக்கான ஆடை என பல விஷயங்களை செய்திருக்கிறார் என்றால் அதற்கு பிரியங்கா தான் முக்கிய காரணம். இந்த ஜோடி கடந்த 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர்களிலேயே அனைவருக்கும் தெரியாமல் இருக்கும் காதல் கதை என்றால் அது ரஹானே ராதிகா ஜோடி தான். ரஹானே தனது இளம் பருவத்தில் இருக்கும்போதே ராதிகா என்ற பெண்ணை காதலித்தார்.
அதன் பிறகு ரகானே கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்தாலும் தன்னுடைய இளம் வயது காதலியை மறக்காமல் அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.