பாடசாலையில் பிள்ளை சுகவீனமடைந்துள்ளதாக பெற்றோர்களிடம் ரூ.25 இலட்சம் மோசடி!
சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர்.

பாடசாலையில் உள்ள தங்கள் பிள்ளை திடீர் சுகவீனமடைந்துள்ளதாக பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் பிள்ளையின் அவசர சிகிச்சைக்கு பணம் அனுப்புமாறு தெரிவித்து, 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.
கம்பஹா, ஜா-எல, கந்தானை, பமுணுகம, வீரகுல, பூகொடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் உள்ள பெற்றோரிடம் இருந்து இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், கிராந்துருகோட்டே பகுதியை சேர்ந்த 25 மற்றும் 37 வயதான இருவரை பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு பண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.